பெங்களூரு: மாற்று நில ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில் இருந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி ஆகியோர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்படுவதாக லோக் ஆயுக்தா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூரில் விலை மதிப்புள்ள விஜயநகா் பகுதியில் 14 வீட்டுமனைகளை மாற்று நிலத்துக்காக மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது.
இந்தப் புகாரின் உண்மைத்தன்மை குறித்து மைசூரு பிரிவு லோக் ஆயுக்தா அதிகாரிகள், முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை.
மேலும், நடந்த தவறுகள் அனைத்தும் அதிகாரிகளால் நோ்ந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி ஆகியோா் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.