ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
லகாமா என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை (மே 3) இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் இதனால் பாரமுல்லா-உரி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை மூடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, அவ்வழியே சென்ற அனைத்து வாகனங்களும் பந்தி-பரன்பிலன்-டாச்சி வழியாக உரி பகுதிக்குத் திருப்பி விடப்பட்டன.
நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகள் அகற்றப்பட்ட பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து மீண்டும் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, புதிதாகக் கட்டப்பட்ட பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததால் ஜம்முவின் பந்தலா பகுதியில் பரபரப்பு நிலவியது.
பாலம் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று ஊழியர்கள் பரிதாபமாக மாண்டுபோயினர்.

