தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழலை மறைக்கவே மொழிப் பிரச்சினை: அமித்ஷா

1 mins read
6c3c389a-c85c-4360-83e0-aab01a110414
உள்துறை அமைச்சர் அமித்ஷா. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தி திணிக்கப்படுவதாகக் கூறிவருகின்றன. அதை பாஜக மறுத்து வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) பேசினார்.

“பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளைத் தமிழில் படிக்க வழிவகை செய்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான். இந்தி எல்லா மொழிகளுக்கும் நண்பன் தான், மொழியை வைத்து அரசியல் செய்வோரை அம்பலப்படுத்துவோம்,” என்று அமித்ஷா கூறினார்.

“நாங்கள் மாநில மொழிகளுக்கு எதிராக இருக்கிறோம் என்று கூறுவதா?, டிசம்பர் மாதத்திற்குப் பிறகு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் மொழிகளில் கடிதம் எழுதுகிறேன். தங்களின் ஊழலை மறைப்பதற்காக மொழியின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு இதுவே எனது பதில்,” என்று அவர் குறிப்பிட்டார்.

மொழியின் பெயரால் அரசியல் செய்பவர்களின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்போது பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளைத் தமிழில் படிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமித்ஷா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்