கரிம ஒதுக்கீடு மோசடி வழக்கிலிருந்து மறைந்த முன்னாள் பிரதமர் விடுவிப்பு

கரிம ஒதுக்கீடு மோசடி வழக்கிலிருந்து மறைந்த முன்னாள் பிரதமர் விடுவிப்பு

1 mins read
279c9df1-fa08-4819-8bdf-c76be0d76c39
இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். - கோப்புப் படம்: டிடி இந்தியா

புதுடெல்லி: கரிம ஒதுக்கீட்டில் மோசடி இடம்பெற்றதாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெல்லி நீதிமன்றம் ஒன்று 11 ஆண்டுகளுக்கு முன்பு அழைப்பாணை விடுத்திருந்தது.

அவர் மறைந்து ஈராண்டுகளுக்குப் பிறகு இப்போது அவ்வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்திய உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (ஜூலை 29) அவரை வழக்கிலிருந்து விடுவித்தது.

உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு நீதிபதி பாரத் பர‌ஷருக்குக்கீழ் கரிம ஒதுக்கீடு மோசடி தொடர்பான நீதிமன்ற விசாரணை நடந்தது. இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு இவ்விசாரணையை மேற்கொண்டது.

ஒடிசாவில் உள்ள டாலாபிரா-II கரிமக் கட்டி, வர்த்தகரும் செல்வந்தருமான குமார் மங்களம் பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு முறையாக ஒதுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. அந்த விவகாரத்தின் தொடர்பில் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி திரு சிங்குக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

அச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் காலத்தில் திரு சிங், கரிம அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

அவ்வழக்குகளை முடித்து வைக்குமாறு கோரி மத்தியப் புலனாய்வுப் பிரிவு 2014ஆம் ஆண்டில் தொடர்ந்து இருமுறை அறிக்கைகளைச் சமர்ப்பித்தபோதும் தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமைச் செயலாளராக இருக்கும் பர‌ஷர் அவ்வாறு செய்ய மறுத்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்