பல்வேறு கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து

பல்வேறு கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து

படம்: ஊடகம்

17 Sep 2024 - 8:54 pm

1 mins read

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்குச் செவ்வாய்க்கிழமை 74 வயது ஆனதையொட்டி, பல்வேறு கட்சித் தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க கடவுள் ஆசிர்வதிக்கட்டும்,” எனக் கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி எக்ஸ் தளத்தில், “பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகள்,” எனத் தெரிவித்துள்ளார்.

“பிரதமர் நரேந்திரமோடிக்கு எனது வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் நீடித்த ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

சமாஜ்வாடி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவும் பிரதமருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதிபர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், மற்ற மாநில முதல்வர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்