மனைவியைப் பட்டினி போட்டுக் கொன்ற ஆடவருக்கு ஆயுள் தண்டனை

1 mins read
d925b879-a716-4980-852a-d3717857a760
கோப்புப் படம் - பிக்சாபே

பரேலி: கடந்த 2021ஆம் ஆண்டில் தனது மனைவியைப் பட்டினி போட்டுக் கொன்றதற்காக இங்குள்ள நீதிமன்றம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் ஆடவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ஞானேந்திர திரிபாதி சனிக்கிழமை குற்றவாளி மனோஜுக்கு ரூ.10,000 அபராதமும் விதித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம், கரேலி கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் தனது மனைவி மம்தாவை ஒரு வாரமாக உணவு, தண்ணீர் இல்லாமல் அறையில் அடைத்து வைத்திருந்ததாக கூடுதல் மாவட்ட அரசு வழக்கறிஞர் சுனில் பாண்டே தெரிவித்தார்.

அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் காவலர்களிடம் புகார் அளித்தபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததாக என்டிடிவி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மம்தாவின் அழுகிய உடல் கட்டிலுக்கு அடியில் போர்வையில் சுற்றப்பட்டிருந்ததைக் காவலர்கள் கண்டுபிடித்தனர்.

பின்னர், மம்தாவின் தந்தை, மனோஜ்மீது வழக்கு தொடர்ந்தார்.

மம்தா பசி, தாகத்தால் இறந்ததாக நீதிமன்றம் கண்டறிந்ததாகப் பாண்டே கூறினார்.

குறிப்புச் சொற்கள்