ஆயுள் தண்டனைக் கைதி 45 ஆண்டுக்குப் பிறகு நிரபராதி எனத் தீர்ப்பு

ஆயுள் தண்டனைக் கைதி 45 ஆண்டுக்குப் பிறகு நிரபராதி எனத் தீர்ப்பு

சித்திரிப்பு படம்: தினமணி

17 Jul 2026 - 7:11 pm

1 mins read

லக்னோ: கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றவர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி எனத் தெரிய வந்ததை அடுத்து விடுதலை செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு நடந்த கொலை தொடர்பான வழக்கில் மூன்று பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

1981ஆம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்குப் பிறப்பித்த ஆயுள் தண்டனை உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

கொலை வழக்கில் தண்டனை பெற்ற மூவரில் இருவர் விசாரணையின்போதே இறந்துவிட்டனர். மூன்றாவது நபரான ஹிரால் லால் என்பவர் மட்டுமே தீர்ப்பைக் கேட்க உயிருடன் இருந்தார்.

இந்த வழக்கில் நேரடி சாட்சியங்களின் வாதத்தை ஏற்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், சந்தேகத்தின் பலனைக் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமாக அளித்து அவரை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.

கொலைக் குற்றத்துக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்து முடித்த பிறகுதான் ஹிரால் லாலுக்கு விடுதலை கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஆயுள்தண்டனைகைதிஉயர் நீதிமன்றம்உச்ச நீதிமன்றம்விடுதலை