தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலிஸ்தான் ஆதரவாளர்களால் ஆபத்து என்கிறார் மத்திய அமைச்சர்

1 mins read
72577152-3b54-43e1-b8a1-5ed3a88e3097
அமைச்சர் ரவ்நீத் சிங். - படம்: ஊடகம்

சண்டிகர்: காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு தெரிவித்துள்ளார்.

தன்னையும் பஞ்சாப்பின் முக்கியமான அரசியல்வாதிகளையும் கொலை செய்ய காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அம்ரித்பால் சிங், கடந்த 2023ஆம் ஆண்டு கைதானார். அவர் தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பு காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் தேசிய புலனாய்வு முகமை சாடியுள்ளது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட அம்ரித்பால் சிங்கின் தண்டனைக் காலம் அண்மையில் ஓராண்டு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ரவ்நீத் சிங் பிட்டு ஆகியோர் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இவரது ஆதரவாளர்கள் சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரவ்நீத் சிங், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

“எனது பாட்டனார் பஞ்சாப்பில் அமைதிக்காக உயிரைத் தியாகம் செய்தவர். நான் தியாகிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

“இந்த அச்சுறுத்தலுக்கெல்லாம் அஞ்ச மாட்டேன். பஞ்சாப்பை மீண்டும் இருளில் மூழ்க அனுமதிக்க மாட்டேன்,” என்றார் ரவ்நீத் சிங்.

குறிப்புச் சொற்கள்