மும்பை: இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கோடீஸ்வரர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் நகரங்களின் பட்டியலில் சென்னை ஆறாவது இடத்தில் உள்ளதாக அண்மைய ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நகரங்களில் புனே 7வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் இருக்கும் இந்த நகரில் 22,500 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
சென்னையில் ஏறக்குறைய 22,800 கோடீஸ்வரர்கள் உள்ளனர். இந்தப் பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரமான கோல்கத்தா. அங்கு 26,600 கோடீஸ்வரர்கள் வசிக்கின்றனர்.
நான்காம் இடத்தில் உள்ள குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிக்கும் இந்தியக் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 26,800.
கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியத் தலைநகரமான டெல்லி இரண்டாம் இடத்திலும் கர்நாடக மாநிலத் தலைநகரமான பெங்களூரு 31,600 கோடீஸ்வரர்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. டெல்லியில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68,200 ஆகும்.
ஒட்டுமொத்த இந்தியாவில், கோடீஸ்வரர்கள் அதிகம் குவிந்துள்ள நகரம் மும்பை. மகாராஷ்டிர மாநிலத் தலைநகரான அங்கு மட்டும் 142,000 கோடீஸ்வரர்கள் வசிக்கின்றனர்.

