வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது

1 mins read
ff52e36b-21a1-402b-b3d6-2ae586ced1b3
தமிழகத்தில் 10 தேதி வரை பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: தினத்தந்தி

சென்னை: வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கடுங்குளிர் நிலவி வருகிறது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காலையில் பனிமூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் வானிலை மாற்றம் காரணமாக பல இடங்களில் மீண்டும் மழை பெய்யும் சூழல் காணப்படுகிறது.

இந்த மாற்றம் காரணமாக பூமத்திய ரேகையை ஒட்டிய தெற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி உள்ளது. இதனால் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெறக்கூடும் எனத் தெரிய வந்துள்ளது.

இதனால் தமிழகத்தில் 10 தேதி வரை பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படலாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்