லக்னோ: தை மாத பௌர்ணமியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12), நண்பகல் 12 மணி வரை ஏறக்குறைய 1.60 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.
மகா கும்பமேளாவின்போது தை மாத பௌர்ணமியில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை கும்பமேளாவுக்கு வருகை தந்த பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் ரோஜா இதழ்கள் தூவப்பட்டன.
உத்தரப் பிரதேச முதல்வர் லக்னோவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, கும்பமேளா நிகழ்வுகளைக் கண்காணித்தார்.