தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகா கும்பமேளா: ஒரே நாளில் 1.36 கோடி பேர் புனித நீராடல்

1 mins read
5705914b-c717-459e-8074-25261bba6907
கும்பமேளாவில் ஒரே நாளில் 1.36 கோடி பேர் புனித நீராடினர். உள்படம்: ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் அமைச்சர் நாரா லோகேஷ் குடும்பத்துடன் புனித நீராடல். - படம்: ஊடகம்

பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பிப்ரவரி 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மட்டும் ஒரே நாளில் 1.36 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வான மகா கும்பமேளாவில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகளும் சங்கமிக்கும் பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 17ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, கும்ப மேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலில் கலந்துகொண்டுள்ள பக்தர்கள் எண்ணிக்கை 54.31 கோடியைக் கடந்துள்ளது என்று உத்தரப்பிரதேச அரசின் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்