மகாராஷ்டிர தேர்தல்: 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

மகாராஷ்டிர தேர்தல்: 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

2 mins read
377544f9-bdb7-4b10-93bf-d45f179b563d
காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அஜித் என்பவரின் கடைக்குச் சென்று முடி திருத்தம் செய்து கொண்டார். அப்போது அந்த சலூன் கடைக்காரரிடம் பேசி அவரது குறைகள் மற்றும் தேவைகளை ராகுல் கேட்டறிந்தார். - படம்: சமூக ஊடகம்
multi-img1 of 2

மும்பை: மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை (அக்டோபர் 26) வெளியிட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

வேட்புமனுத் தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) தொடங்கியது. வரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) வேட்பு மனுத் தாக்கல் செய்ய இறுதிநாள்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 23 வேட்பாளர்களின் பெயர் உள்ளது.

இந்தப் பட்டியலுடன் இதுவரை 71 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 24) அக்கட்சி 48 பேரை உள்ளடக்கிய முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இந்த நிலையில் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூடித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து ஆலோசித்ததையடுத்து 23 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மகா விகாஸ் அகாடி கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.

கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டனர்.

அதன்படி, காங்கிரஸ், சிவசேனை (யுபிடி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய 3 கட்சிகளும் தலா 85 இடங்களில் போட்டியிடும் என்றும் மீதமுள்ள 23 தொகுதிகள் அந்தந்தக் கட்சி வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி இன்னும் 14 வேட்பாளர்களின் பெயரை ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளது.

குறிப்புச் சொற்கள்