மகாராஷ்டிர தேர்தல்: இறுதிக் கட்டத்தில் தொகுதிப் பங்கீடு

மகாராஷ்டிர தேர்தல்: இறுதிக் கட்டத்தில் தொகுதிப் பங்கீடு

1 mins read
f918e3e3-fded-4a8e-b932-129d96efb93f
சரத் பவார். - படம்: இந்திய ஊடகம்

மும்பை: மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் 288 இடங்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 20ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் மஹாயுதி கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இரு கூட்டணியில் உள்ள கட்சிகளும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தாலும் சில தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது என்று கூட்டணிக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மகா விகாஸ் அகாடியில் இடம்பெற்றுள்ள சரத் பவார், “மகா விகாஸ் அகாடி கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 95 விழுக்காட்டு இடங்களில் ஒருமனதாக ஒதுக்கீடு நிறைவடைந்து விட்டது. பிற தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

“மகாராஷ்டிரத்தில் ஆட்சியை மாற்ற நாங்கள் விரும்புகிறோம். மக்களின் பல பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன. தற்போதைய ஆட்சியாளர்களால் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. நாங்கள் செய்வோம் என்று மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்