'எந்த விவசாயிக்கும் எனது நிலை வரக்கூடாது'

'எந்த விவசாயிக்கும் எனது நிலை வரக்கூடாது'

1 mins read
5c5c536d-2d34-4168-81ba-8ef733b85356
ராஜேந்திர சவான். படம்: ஊடகம் -

தென்மேற்கு மகாராஷ்டிராவில் வசிக்கும் வெங்காய விவசாயி ஒருவர், 512 கிலோ வெங்காயத்தை வெறும் 2 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

"இதுபோன்ற நிலைமை வேறு எந்த விவசாயிக்கும் வரக்கூடாது," எனவும் அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் வசித்து வரு கிறார் ராஜேந்திர சவான், 63.

விவசாயியான இவர், சோலாப்பூரில் உள்ள வெங்காய வியாபாரி ஒருவருக்கு 10 மூட்டை வெங்காயத்தை விற்பனைக்கு அனுப்பிய நிலையில், வெறும் 2 ரூபாய் 49 காசுகள் மட்டுமே நிகர லாபமாக கிடைத்ததாகத் தெரிவிக்கிறார்.

வெங்காயத்தின் மொத்த எடை 512 கிலோ என்றும் அவற்றுக்குக் கிடைத்த மொத்த விலை ரூ.512 என்றும் கூறிய அவர், சரக்கு ஏற்றுமதி, போக்குவரத்து, தொழிலாளர் செலவு உள்ளிட்ட கட்டணச் செலவுகளாக 509 ரூபாய் 51 காசுகளைக் கழித்தபிறகு எஞ்சிய லாபம் 2 ரூபாய் 49 காசுகள் மட்டுமே என்றார்.

இதன்மூலம் தான் மட்டுமன்றி மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளது தெரிவதாகவும் வெங்காய விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளதாகவும் கூறிய ராஜேந்திர சவான், "இதுபோல் வருமானம் கிடைத்தால் எங்களால் எப்படி வாழமுடியும்?" எனவும் கேட்டுள்ளார்.

"வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைக்கவேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்," என்றும் மத்திய-மாநில அரசுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.