தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணவில் சிறுநீரைக் கலந்து சமையல் செய்து கொடுத்த பணிப்பெண்

1 mins read
b48b99b9-d680-4224-aaa0-52dee6eb4d15
படம் - பிக்சாபே

காசியாபாத்: கேட்கவே அருவருக்கத்தக்க சம்பவம்தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

காசியாபாத்தில் தொழிலதிபர் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர், தான் சமைக்கும் உணவில் தனது சிறுநீரைக் கலந்து சமைத்துக் கொடுத்துள்ளார்.

கடந்த சில நாள்களாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த தொழிலதிபரும் அவரது மனைவியும் நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்று வந்தும் குணமடையாததால், பணிப்பெண் சாப்பாட்டில் ஏதேனும் கலந்து கொடுத்து வருகிறாரோ என்ற சந்தேகம் தொழிலதிபருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனைக் கண்டறிய தனது கைப்பேசியைச் சமையலறையில் மறைத்து வைத்து கண்காணித்துள்ளார்.

அப்போது சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணிப்பெண், பாத்திரம் ஒன்றில் சிறுநீர் கழித்து அதனைச் சமையலில் பயன்படுத்துகிறார்.

இந்தக் காணொளியைக் கண்ட தொழிலதிபரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட தொழிலதிபர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

முதலில் குற்றச்சாட்டை மறுத்த பணிப்பெண், காணொளியைக் காண்பித்ததும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து அந்தப் பெண் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

தொழிலதிபரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்