பொதுப் போக்குவரத்தில் உடற்குறையுள்ளோருக்கெனப் பெரிய மாற்றங்களுக்குப் பரிந்துரை

1 mins read
3b944fdd-a3ca-45e7-a657-4c682501905f
சித்திரிப்பு: - disabilityin.org / இணையம்

புதுடெல்லி: இந்தியாவின் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் உடற்குறையுள்ளோருக்குக் கைகொடுக்கப் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்ய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்தப் பரிந்துரைகளைக் கொண்ட நகல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுப் பேருந்துகளிலும் பெருவிரைவு ரயில்களிலும் சக்கர நாற்காலிகளுக்கென இடம் அமைத்துத் தருவதைக் கட்டாயமாக்குவது, ரயில் நிலையங்களில் படிகள் இல்லாத கழிவறைகளை அமைத்துத் தருவது, உடற்குறையுள்ளோருக்கு உதவ எல்லாப் பொதுப் போக்குவரத்துப் பிரிவுகளிலும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவது உள்ளிட்டவை பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்களில் அடங்கும்.

இதன்படி இந்தியாவின் சமூக நீதி, ஆற்றலூட்டும் அமைச்சின்கீழ் (Ministry of Social Justice and Empowerment) உள்ள உடற்குறையுள்ளோருக்கு ஆற்றலூட்டும் பிரிவு, கருத்து தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளிடமும் பொதுமக்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

உடற்குறையுள்ளோருக்கான பரிந்துரைகளைக் கொண்டு நகல் அறிக்கை ‘போக்குவரத்துப் பயன்பாட்டுக் கட்டமைப்பு’ (Transport Accessibility Framework) என்றழைக்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்குப் பதிவுசெய்வது, அவற்றில் ஏறுவது, வாகன விவகாரங்கள் உள்ளிட்ட அம்சங்களை நகல் அறிக்கை உள்ளடக்குகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்