நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளமாலத்தீவுக்கு இந்தியா மீண்டும் அவசர கால நிதி

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளமாலத்தீவுக்கு இந்தியா மீண்டும் அவசர கால நிதி

1 mins read
2ad2cbf2-0667-4753-9716-248dddde4953
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு - கோப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: அண்டை மாலத்தீவு நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு சீனாவுக்கு நெருக்கமாக அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு செயல்பட்டார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து, மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்ததால் இந்தியா முழுவதும் கண்டனம் எழுந்தது.

இப்பிரச்சினைகள் காரணமாக இந்தியா-மாலத்தீவு இடையிலான உறவு பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் மோடி 3வது முறையாக கடந்த ஜூன் மாதம் பதவியேற்றார். அந்த நிகழ்ச்சியில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கலந்து கொண்டார்.

அதன்பின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த மாதம் மாலத்தீவு சென்று இரு நாடுகள் இடையிலான உறவை சுமூகமாக்கினார்.

தற்போது மாலத்தீவு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

கொவிட்-19 பாதிப்புக்குப்பிறகு மாலத்தீவின் சுற்றுலா வருவாய் குறைந்தது. கடன் மதிப்பு 8 பில்லியன் டாலராக அதிகரித்தது. மாலத்தீவுக்கு இந்தியா கடந்தாண்டு 50 மில்லியன் டாலர் அவசரகால நிதியுதவி வழங்கியிருந்தது.

இந்த நிலையில் அரசாங்கச் செலவுகளுக்காக இந்த நிதியுதவியை இந்தாண்டும் நீட்டிக்கும்படி மாலத்தீவு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து ஸ்டேட் பாங்க்ஆப் இந்தியா மூலம் வழங்கப்படும் 50 மில்லியன் டாலர் நிதியுதவியை மேலும் ஓர் ஆண்டுக்கு இந்தியா நீட்டித்துள்ளது என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்