மாலத்தீவுக்கு ரூ.420 கோடி இந்தியா நிதியுதவி

1 mins read
fbf5acfc-a88c-45ac-b254-f0fd461cc911
மாலத் தீவு. - கோப்புப் படம்

புதுடெல்லி: அண்டை நாடான மாலத்தீவுக்கு ரூ.420 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கியுள்ளது. நிதியுதவி வழங்கும் ஆணையை மேலும் ஓர் ஆண்டிற்கு 2026ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதிவரை நீட்டிப்பதற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு மத்திய அரசுக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஹாலீல் நன்றி தெரிவித்துள்ளார்.

“சரியான நேரத்தில் மாலத்தீவுக்கு இந்தியா உதவியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துகிறது,” என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ச்சியான இந்திய விரோதச் செயல்பாடுகள், இந்தியாவுக்கு எதிரான அமைச்சர்களின் வெறுப்புப் பிரசாரம் காரணமாக அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிந்தது.

அத்தியாவசிய தேவைகளுக்கு பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத அளவுக்கு அன்னியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான், மீண்டும் உதவி கேட்டு இந்தியாவிடம் வந்துள்ளது மாலத்தீவு அரசு.

இந்தியா கடந்தாண்டு வழங்கிய 50 மில்லியன் டாலர் (ரூ.420 கோடி) அவசர கால நிதியுதவியை இந்தாண்டும் நீட்டிக்கும்படி மாலத்தீவு வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, ரூ.420 கோடி நிதியுதவியை வழங்கி உள்ளது இந்தியா.

குறிப்புச் சொற்கள்