திரிணாமூல் காங்கிரசிலிருந்து மம்தா பானர்ஜி நீக்கம்

திரிணாமூல் காங்கிரசிலிருந்து மம்தா பானர்ஜி நீக்கம்

1 mins read
அதிருப்திப் பிரிவினர் அறிவிப்பு
729f90c6-8296-42aa-a0d1-9a95bf12ff97
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை நிறுவிய திருவாட்டி மம்தா பானர்ஜி. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் முன்​னாள் முதல்வரும் திரிணா​மூல் காங்கிரஸ் கட்​சி​யின் நிறு​வனரு​மான மம்தா பானர்ஜியைக் கட்​சித் தலை​வர் பதவியி​லிருந்து நீக்​கி​யுள்​ள​தாக ரிதபி​ரதா பானர்ஜி தலை​மையி​லான அதிருப்திக் குழு​வினர் அறி​வித்​துள்ளனர்​.

கோல்​கத்​தா​வில் உள்ள ஒரு தனி​யார் விடு​தி​யில், ரிதபி​ரதா பானர்ஜி தலை​மை​யில் திரிணா​மூல் காங்​கிரசின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற உறுப்​பினர்​களின் அவசர ஆலோ​சனைக் கூட்​டம் திங்கட்கிழமை (ஜூன் 21) நடைபெற்றது. மாலை 4 மணி​யள​வில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில் கோல்​கத்​தா, பஹ்ராம்பூர், உத்​தர்​பா​ரா, ஸ்ரீராம்​பூர், டம் டம் உள்​ளிட்ட பல்​வேறு நகராட்​சிகளைச் சேர்ந்த 40க்​கும் மேற்​பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்​து​கொண்​டனர்.

அக்கூட்​டத்​தில் ரிதபி​ரதா பானர்​ஜி, சந்​தீபன் சாஹா, கோல்கத்​தா​வின் முன்​னாள் மேயர் ஃபிர்​ஹாத் ஹக்​கீம் உள்​ளிட்ட முக்​கி​யத் தலை​வர்​கள் பங்​கேற்​றனர். ​கூட்​டத்​தின் முடி​வில், அகில இந்​திய திரிணா​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் 10 பேர் கொண்ட புதிய தேசியச் செயற்​குழு ஒரு​மன​த்துடன் உரு​வாக்​கப்​பட்​டுள்​ள​தாக அரசி​யல் வட்​டாரங்​கள் தெரிவிக்கின்றன.

அந்தக் ​கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்ட தீர்​மானத்​தின்​படி, கட்​சி​யின் தலைவர் பதவியிலிருந்து திருவாட்டி மம்தா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவ​ராக அரூப் ராய் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். புதிய செயற்​குழு​வில் இடம்பெற்றுள்ள மற்ற தலைவர்​களுக்கும் முக்​கியப் பொறுப்பு​கள் வழங்கப்பட்​டுள்​ளன.

குறிப்புச் சொற்கள்