பாஜக அரசு விரைவில் வீழ்த்தப்படும்: மம்தா

பாஜக அரசு விரைவில் வீழ்த்தப்படும்: மம்தா

1 mins read
43182cda-d05d-4aee-8c68-8efce9dceb51
ஆளும் பாஜக அரசு விரைவில் வீழ்த்தப்படும் என்றும் சிறுபான்மையின மக்களைக் குறிவைத்து இந்திய அரசு செயல்படுகிறது என்றும் மம்தா சாடினார். - கோப்புப் படம்: ஏபிபி

கோல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு விரைவில் முடிவுக்கு வரும் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அண்மைய சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் கோல்கத்தாவில் நடைபெற்ற தனது கட்சி எம்எல்ஏக்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

ஆளும் பாஜக அரசு விரைவில் வீழ்த்தப்படும் என்றும் சிறுபான்மையின மக்களைக் குறிவைத்து இந்திய அரசு செயல்படுகிறது என்றும் மம்தா சாடினார்.

கோல்கத்தாவில் ஏழை, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் அவர்களுக்குச் சொந்தமான கடைகள் பாஜக அரசால் இடிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையை பாஜக முற்றிலுமாக சிதைத்துவி்ட்டது என்றார்.

முன்னதாகப் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, கோல்கத்தாவில் உள்ள தனது வீட்டை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகக் கூறினார்.

பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சப் போவதில்லை என சவால் விடுத்த அவர், லஞ்சம் வாங்கிய ஒருவர் (சுவேந்து அதிகாரி) மேற்கு வங்கத்தின் முதல்வராக அமர்ந்திருப்பது மாநில வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை என்றார்.

குறிப்புச் சொற்கள்