இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடவில்லை: வேட்பாளர்களை அறிவித்தார்

இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடவில்லை: வேட்பாளர்களை அறிவித்தார்

2 mins read
dfed39e1-85b7-4aab-8f81-16965885cb20
நந்திகிராம் தொகுதியில் சஞ்சிதா பிரதான், ரெஜிநகர் தொகுதியில் ரபியுல் ஆலம் சௌத்ரி ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர் - படம்: தி மனி கன்ட்ரோல்

கோல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நந்திகிராம், ரெஜிநகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. எதிர்பார்த்தபடி முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.

நந்திகிராம் தொகுதியில் சஞ்சிதா பிரதான், ரெஜிநகர் தொகுதியில் ரபியுல் ஆலம் சௌத்ரி ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர். இவ்விரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்று, அக்டோபர் 9ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ரிதர்ப்பா பானர்ஜி தலைமையில் தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால், தங்களது கிளர்ச்சிப் பிரிவு சார்பில் தனியாக வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று அதிருப்தித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்துடன் சேர்ந்து தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கும் புதுவையில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் ஒரே கட்டமாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மேலும், அசாமைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி பிரத்யுத் போர்டோலோய் பாஜகவில் இணைந்ததால் காலியான நாகோன் மக்களவைத் தொகுதிக்கும் அக்டோபர் 6ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேற்கு வங்க அரசியலில் திரிணாமுல் காங்கிரசின் பலத்தை நிரூபிக்கவும் உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில் கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்தவும் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியப் பங்காற்றும் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்