பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; ஆடவர் கைது

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; ஆடவர் கைது

படம்: இந்திய ஊடகம்

21 Jun 2025 - 7:49 pm

1 mins read

சண்டிகர்: காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பைப் பயங்கரவாத இயக்கமாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த இயக்கத்தின் கிளை அமைப்பான அனைத்துலக பாபர் கால்சா என்ற அமைப்பும் பயங்கரவாத இயக்கம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு பஞ்சாப்பில் மறைமுகமாகவும், கனடா போன்ற நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப்பின் அமர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த நபருக்கும் அனைத்துலக பாபர் கால்சா பயங்கரவாத அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் அமர்தசரசில் சோதனை நடத்திய அதிகாரிகள், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அன்ஹர் சிங் என்ற நபரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அன்ஹரிடம் ஆறு கைத்துப்பாக்கிகள் மற்றும் அதற்கான தோட்டாக்கள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அன்ஹரிடம் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்