தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொற்கோவிலில் தாக்குதல் நடத்திய ஆடவர்: ஐவர் காயம்

1 mins read
0af44523-3dcb-436e-98de-e856bbf05052
பொற்கோவில் தாக்குதல் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். - படம்: பிடிஐ

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் பொற்கோவில் அமைந்துள்ளது.

இந்நிலையில், பொற்கோவில் வளாகத்திற்குள் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) இரும்புக் கம்பியுடன் நுழைந்த ஒரு நபர், அங்கிருந்த பக்தர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினார்.

அங்கிருந்த மக்கள் தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்தனர்.

அந்த நபரின் பெயர் சுல்பான் என்பதும், அவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொற்கோவிலுக்குள் பக்தர்கள் மீது இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்