போபால்: ஆடவர் ஒருவர் கையில் சுற்றிய பாம்புடன் மோட்டார்சைக்கிள் ஓட்டிச் செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
அந்த மோட்டார்சைக்கிளின் பின்புறம் உள்ள வாகனப் பதிவெண் பலகை, அது மத்தியப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டதைக் காட்டுகிறது.
இருப்பினும் சம்பவம் நடந்த இடம் எதுவென்று சரியாகத் தெரியவில்லை.
ஆடவரின் இடது கை மணிக்கட்டைப் பாம்பு சுற்றியிருப்பதையும் அதன் தலையை அவர் கெட்டியாகப் பிடித்திருப்பதையும் படத்தில் காண முடிகிறது.
மோட்டார்சைக்கிளின் பின்புறம், ‘சைத்தான் என்னை அப்பா என்று அழைக்கும்’ எனப் பொருள்படும் வாசகம் கிறுக்கப்பட்டுள்ளது.
ஆடவர் பாம்பைப் பிடித்திருக்கும் விதத்தைப் பார்த்தால் அவர் பாம்பு பிடிப்பவராகவோ பாம்பாட்டியாகவோ இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
ஆடவர் பாம்பைப் பிடித்தபடி மோட்டார்சைக்கிளோட்டுவதைக் காட்டும் காணொளி இன்ஸ்டகிராமில் பகிரப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை அது பெற்றுள்ளது.