மலப்புரம்: மகள் என்று பாராமல் அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய ஆடவருக்கு 139 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆடவருக்கு 5,85,000 ரூபாய் (S$9,486) அபராதமும் விதிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு 14 வயது.
அவர் 2020ஆம் ஆண்டு மே 21ஆம் தேதியன்றும் அதற்கு அடுத்த இரண்டு நாள்களிலும் தன் தந்தையால் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
இதற்கிடையே, சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை அவரின் தாயாரும் பாட்டியும் மூடி மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் ஆளுக்கு 10,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும் என்று பரப்பனங்காடி பொக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த இழப்பீட்டுத் தொகை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.