ஓடும் மோட்டார்சைக்கிளில் எல்லைமீறி நடந்துகொண்ட காதலர்கள்

ஓடும் மோட்டார்சைக்கிளில் எல்லைமீறி நடந்துகொண்ட காதலர்கள்

1 mins read
e7244c82-73d5-4230-b0d5-1c74186b46c5
மோட்டார்சைக்கிளைக் காதலன் ஓட்டிச்செல்ல, காதலியோ சாலையின் பின்புறம் நோக்கி அவருக்கு முன்னால் அமர்ந்து காதலனைக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, கொஞ்சிக்கொண்டே செல்கிறார். -

காதலுக்கு மட்டும் வழக்கத்திற்கு மாறான விஷயங்களை விஷயங்களை செய்யவைக்கும் ஆற்றல் உண்டு. காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள். ஆனால், அண்மைக்காலமாக காதலுக்கு இடம், பொருள் என்று எதுவுமே இல்லை என்பதுபோல பல காதலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

காதலர்கள் ஒருவரையொருவர் கொஞ்சிக்கொள்வது சகஜமான விஷயமே. ஆனால், பொதுவெளியில் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டியது காதலர்களுக்கு மட்டுமின்றி திருமணமான கணவன், மனைவிக்குமே பொருந்தும். ஆனால் சில இளம் ஜோடிகள், படங்களில் வருவதுபோல வித்தியாசமான சாகசங்களில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர்.

ஓடும் மோட்டார்சைக்கிளில் காதல்

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் பரபரப்பான சாலையில் ஜனவரி 15ஆம் தேதி மாலை காதலர்கள் இருவர் ஓடும் மோட்டார்சைக்கிளில் முத்தமிட்டுச்செல்வதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது வருகிறது.

பொதுவாக இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் முன்னால் அமர்ந்து இருக்க, உடன் செல்பவர் பின்னால் அமர்ந்திருப்பார். காதலர்கள்கூட வழக்கமாக அப்படித்தான் செல்வார்கள்.

ஆனால், லக்னோவின் பரபரப்பான சாலையில் மோட்டார்சைக்கிளைக் காதலன் ஓட்டிச்செல்ல, காதலியோ சாலையின் பின்புறம் நோக்கி அவருக்கு முன்னால் அமர்ந்து காதலனைக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, கொஞ்சிக்கொண்டே செல்கிறார். இவர்களது செயல், இவர்களைச் சுற்றியுள்ளவர்களின் கவனத்தை ஈர்த்தது.

பின்னால் வந்த வாகனமோட்டி ஒருவர் இதைக் காணொளி எடுத்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். இதைக் கண்ட செய்தியாளர் ஒருவர், காவல்துறையிடம் காணொளியைப் பகிர்ந்தார்.

காணொளியில் சம்பந்தப்பட்ட அந்தக் காதலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.