தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காதலியை கொன்ற அதே நாள் வேறொரு பெண்ணை மணந்த ஆடவர்

1 mins read
8028c0fd-9c25-4ba7-908c-559c696bdb48
24 வயதான சாஹில் தனது காதலியான நிக்கியை கழுத்தை நெறித்து கொன்றார் (படம்: இந்திய ஊடகம்) -

புதுடில்லியில் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்துவந்த தனது காதலியை கழுத்தை நெறித்து கொன்று அவள் சடலத்தை குளிர்ப்பதனப் பெட்டியில் மறைத்து வைத்துவிட்டு அதே நாள் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார் ஆடவர் ஒருவர்.

24 வயதான சாஹில் என்பவர் தனக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்ட தகவலை தன்னுடைய காதலியிடம் தெரிவிக்கவில்லை. அதை அறிந்த காதலி நிக்கிக்கும் சாஹிலுக்கும் வாக்குவாதம் மூண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நிக்கியின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார் சாஹில்.

நள்ளிரவு தாண்டி சடலத்தை தனது வாகனத்தில் ஏற்றி அதை தனக்கு சொந்தமான உணவகத்துக்கு எடுத்துசென்றுள்ளார் சாஹில். உணவகத்தில் உள்ள குளிர்ப்பதன பெட்டியில் சடலத்தை வைத்துள்ளார். அடுத்த நாள் தனக்கு நிச்சயம் செய்த பெண்ணை அவர் திருமணம் புரிந்துள்ளார்.

நிக்கி பற்றி தனது குடும்பத்தாரிடம் சாஹில் தெரிவிக்கவில்லை. இதனால் அவரை வேறு பெண்ணை மணந்துகொள்ளுமாறு அவருடைய குடும்பத்தார் வற்புறுத்தி வந்துள்ளனர்.

சாஹில் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.