படுக்கையில் சிறுநீர் கழித்த தந்தையைக் கொன்ற மகன்

படுக்கையில் சிறுநீர் கழித்த தந்தையைக் கொன்ற மகன்

1 mins read
ed680359-6cd0-4266-ad67-f60db47b12ee
தந்தையை கொன்ற குற்றத்திற்காக 20 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார் (படம்: இந்திய ஊடகம்) -

படுக்கையில் சிறுநீர் கழித்த முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தமது தந்தையை 20 வயது ஆடவர் கொன்றுள்ளார். இந்தியாவில் புதுடில்லியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

மாண்டவர் 45 வயது ஜித்தேந்திரா சர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைக் கொன்ற குற்றத்திற்காக அவருடைய 20 வயது மகன் சுமித் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து சர்மாவின் மனைவி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் சர்மா படுக்கையில் மாண்டு கிடந்ததைக் கண்டனர்.

தமது தந்தை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர் என்றும், குடிப்பழக்கம் கொண்டவர் என்றும் சுமித் கூறியுள்ளார். சம்பவ நாளன்று அவர் அதிக அளவில் குடித்துவிட்டு படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் கோபமடைந்த சுமித், தந்தையின் கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.