இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்கப் பெண் ஒருவர் தன்னுடைய பணப்பையை தொலைக்க நேரிட்டது. எதிர்பாராத விதமாக பெண்ணின் பணப்பையைக் கண்டெத்த இந்திய ஆடவர் அதை திருப்பிக்கொடுக்க பெண்ணை தொடர்பு கொண்டார்.
இன்ஸ்டாகிராமில் @stephandpete என்று தன்னை அடையாளம் செய்துகொண்ட பெண் ரயிலில் ஏறியபோது தன்னுடைய பணப்பையை தொலைத்தார். அதை தேடுவதற்காக அடுத்த நிலையத்தில் அவர் இறங்கினார். அப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வழியாக ஷிராக் என்பவர் அவரை தொடர்புகொண்டு பெண்ணின் பணப்பை தன்னிடம் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஷிராக் நடத்திவரும் உணவகத்திற்கு அவரை சந்திக்க பெண் சென்றுள்ளார். பணப்பையில் இருந்த பணமும் மற்ற பொருள்களும் அப்படியே இருந்ததாக அப்பெண் கூறினார். ஷிராக்கின் நல் உள்ளத்தை பாராட்டி அவருக்கு பணம் தர அப்பெண் முன்வந்துள்ளார். அதை மறுத்துள்ளார் ஷிராக்.
இந்நிலையில் ஷிராக்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்தியாவின் சுற்றுப்பயணத் துறைக்கு ஷிராக் ஒரு சிறந்த தூதர் என பலரும் அவரை புகழ்ந்து வருகின்றனர்

