சண்டிகர்: ஆடவர் ஒருவரின் கையை வெட்டிய கும்பல், அதனைக் கையோடு எடுத்துச் சென்றுவிட்டது. இந்தச் சம்பவம் இந்தியாவின் அரியானா மாநிலம், குருஷேத்திரத்தில் நேற்று திங்கட்கிழமை (09-01-2023) நிகழ்ந்தது. கையை இழந்த ஜுகுனு என்ற அந்த ஆடவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளியின் துணையுடன் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். "பத்து, பன்னிரண்டு பேர் தங்களது முகத்தை மறைத்தபடி அப்பகுதியில் நுழைந்து, கூரிய ஆயுதங்களைக் கொண்டு ஜுகுனுவைத் தாக்கியதோடு, அவரது கையையும் வெட்டி எடுத்துச் சென்றுவிட்டனர். இதற்கு என்ன காரணம் எனத் தெளிவாகத் தெரியவில்லை," என்று காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் ராம்தத் நைன் கூறினார். ஜுகுனுவிடம் வாக்குமூலம் பெற்று, அதனடிப்படையில் வழக்கு பதியப்படும் என்றும் அவர் சொன்னார்.
ஆடவரின் கையை வெட்டி, கையோடு எடுத்துச் சென்ற கும்பல்
1 mins read
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் விசாரணையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர். படம்: ஏஎன்ஐ -

