ஹார்டோய், உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தின் ஹார்டோய் பகுதியில், ஆடவர் ஒருவர் 12 ஆண்டுகளில் நிலத்துக்கு அடியில் இரண்டு மாடி வீடு ஒன்றைக் கட்டியுள்ளார்.
அந்த அற்புத வீட்டில் 11 அறைகள், ஒரு பள்ளிவாசல், மாடிப்படிகள், கலைக் கூடம் ஆகியவை உள்ளன.
முன்னதாக வீட்டில் பலரும் தண்ணீர் அருந்துவதற்கு ஒரு கிணறும் இருந்தது. ஆனால் இப்போது சிலர் அதனைச் சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
பப்பு பாபு என்றழைக்கப்படும் இர்ஃபான் எனும் அந்த ஆடவர், 2011ஆம் ஆண்டில் மண்வெட்டி ஒன்றைக் கொண்டு மட்டுமே அந்த மாளிகையின் கட்டுமானத்தைத் தொடங்கினார்.
“2011ஆம் ஆண்டில் நான் இந்தக் கட்டடத்தின் கட்டுமானத்தைத் தொடங்கினேன். இந்த வீட்டை நான் தொடர்ந்து கட்டிவருகிறேன்,” என்று இர்ஃபான் கூறினார்.
மாளிகையில் பெரும்பாலான நேரத்தைக் கழிக்கும் அவர், குடும்பத்துடன் உணவு சாப்பிடுவதற்குத் தமது சொந்த வீட்டுக்குத் திரும்புவார்.
மாளிகையைக் கட்ட தொடங்கியதற்கு முன்னர் அவர் தமது பகுதியில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட முயன்றார். இருப்பினும் அந்த முயற்சியில் அவர் தோல்வியுற்றார்.

