புதுடெல்லி: இந்தியாவில் நிகழ்ந்த மூன்று பயங்கரவாதச் சம்பவங்களுக்கு மூளையாக இருந்த லஷ்கர் இ தொய்பா உறுப்பினர் அபு சயியுல்லா (ரசவுல்லா நிஜமானி), பாகிஸ்தானில் மர்மமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தியாவில் மூன்று பெரிய தாக்குதல்கள் நடந்தது. இந்த தாக்குதல் சம்பவங்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு ரசாவுல்லா நிஜாமானி காலித் பொறுப்பேற்றார்.
2001ல் ராம்பூரில் நடந்த CRPF முகாம் தாக்குதல், 2005ல் பெங்களூருவில் நடந்த இந்திய அறிவியல் காங்கிரஸ் (ISC) தாக்குதல், 2006ல் நாக்பூரில் உள்ள ராஷ்ட்ரிய சுயம்சேவச் சங்க (RSS) தலைமையகம் மீதான தாக்குதல்களை அவர் நடத்தியதாக கூறப்படுகிறது.