திருமண நாள், பிறந்தநாளில் கர்நாடக காவல்துறையினருக்கு கட்டாய விடுமுறை

திருமண நாள், பிறந்தநாளில் கர்நாடக காவல்துறையினருக்கு கட்டாய விடுமுறை

1 mins read
b8e960a5-3b27-404a-8391-29ed1704c8e9
குடும்பம், வேலை ஆகிய இரண்டையும் சமநிலையில் கொண்டுசெல்ல காவல்துறையினருக்கு இந்த நடவடிக்கை உதவும் என்றார் டிஜிபி சலீம். - படம்: பெங்களூர் மிரர்

பெங்களூரு: ர்நாடகாவில் காவல்துறையினரின் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றுக்கு கட்டாய விடுப்பு வழங்க அம்மாநிலக் காவல்துறை தலைவர் டிஜிபி சலீம் உத்தரவிட்டுள்ளார்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் காவல்துறையினர் கடுமையாகப் பாடுபடுவதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, காவல்துறையினர் பிறந்த நாளையும் திருமண நாளையும் குடும்பத்துடன் கொண்டாடுவது முக்கியம் என்று டிஜிபி சலீம் கூறியுள்ளார்.

“இந்த இரு நாள்களில் காவல்துறையினருக்கு கட்டாய விடுப்பு வழங்க வேண்டும், இந்நடவடிக்கை காவல்துறையினர் தமது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை உறுதி செய்யும். உணர்வு ரீதியாக அவர்கள் புத்துணர்ச்சி பெறுவர்,” என்று டிஜிபி சலீம் தெரிவித்துள்ளார்.

வேலை, குடும்பம் ஆகிய இரண்டையும் சமநிலையில் கொண்டுசெல்ல இந்த நடவடிக்கை உதவும் என்றும் காவல்துறையினரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்