மணிப்பூர்: 23 சட்டவிரோதப் பதுங்கு குழிகள் அழிப்பு

மணிப்பூர்: 23 சட்டவிரோதப் பதுங்கு குழிகள் அழிப்பு

1 mins read
7b2a366e-059e-4e87-bf6f-085565af8df2
பதுங்கு குழியில் துப்பாக்கி மற்றும் தோட்டா போன்ற பொருள்கள் இருந்தன. - படம்: நார்த் ஈஸ்ட் நியூஸ்
Google News Preferred Icon

இம்பால்: மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் 23 சட்டவிரோதப் பதுங்கு குழிகளைப் பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளனர்.

பதுங்கு குழிகள் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டனர். பதுங்கு குழியில் துப்பாக்கி மற்றும் தோட்டா போன்ற பொருள்கள் இருந்தன.

மேலும் தெங்னௌபால் மாவட்டத்தில் 18 வெடிகுண்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மணிப்பூரில் நிலவி வரும் இன மோதல்களுக்கு மத்தியில், வன்முறையைக் கட்டுப்படுத்தவும் அமைதியை நிலைநிறுத்தவும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து இதுபோன்ற தேடுதல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்