புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எப்போதும் நீலநிறத்திலான தலைப்பாகையை அணிவதுதான் வழக்கம்.
இதுகுறித்து பலரும் எழுப்பிய கேள்விக்கு கடந்த 2013ஆம் ஆண்டு அவரே விளக்கம் அளித்துள்ளார்.
நீல நிறம் தமக்கு மிகவும் பிடித்தமானது என்றும் ஆகையால்தான் அந்த நிறத்தில் தலைப்பாகை அணிந்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
“மேலும், நான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நிறம் நீலம். அங்கு நான் படித்த நாள்கள் மிக அழகானவை. அவை எனது நினைவுகளில் எப்போதும் ஆழமாகப் பதிந்து இருக்கும் வகையில் நீல நிற தலைப்பாகை அணிந்துள்ளேன்,” என்று மன்மோகன் சிங் விளக்கம் அளித்திருந்தார்.