தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யமுனை நதியில் மன்மோகன் சிங்கின் அஸ்தி கரைப்பு

1 mins read
f76543bd-5f17-42cb-980d-473a2f5eda2d
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் கரைக்கப்பட்டது. - படம்: பிடிஐ

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) கரைக்கப்பட்டது.

திரு சிங் (92) கடந்த 26ஆம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது உடலுக்கு அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, சீக்கிய மத வழக்கப்படி அவரது உடல், யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம்போத் காட் பகுதியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், திரு சிங்கின் அஸ்தி குருத்வாரா மஜ்னு கா திலா சாஹிபுக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் கொண்டுவரப்பட்டது. பின்னர் அருகில் உள்ள யமுனை நதியில் அவரது அஸ்தியை உறவினர்கள் கரைத்தனர்.

இதையடுத்து, திரு சிங்கின் மனைவி குர்சரண் கவுர் உள்ளிட்ட உறவினர்கள் குருத்வாராவில் சடங்குகளை செய்தனர்.

குறிப்புச் சொற்கள்