அயோத்தி ராமர் கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மாயம்

அயோத்தி ராமர் கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மாயம்

1 mins read
d4bd0677-fc97-4a9e-95ee-722f0ec187bd
விசாரணையில் ரூ.200 கோடி காணிக்கைப் பணம் காணா​மல் போனதும் தெரியவந்துள்ளது. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்​தின் அயோத்தி ராமர் கோயி​லில் காணிக்கைத் திருட்டு தொடர்​பாக மூன்று பேர் கொண்ட சிறப்​புக் குழுவினர் கடந்த திங்​கட்​கிழமை (ஜூலை 15) விசா​ரணை​யைத் தொடங்கினர்.

முறை​கேடுகள் நடை​பெறுவது குறித்துத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அந்த மாநில முதல்​வர் ஆதித்​ய​ நாத் சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தார்.

விசாரணையில் ரூ.200 கோடி காணிக்கைப் பணம் மட்​டுமல்​லாமல், ராமர் கோயிலுக்குக் காணிக்கை அளிக்​கப்​பட்ட 2 கிலோ எடையுள்ள தங்கக் கதா​யுதம், பல கோடி ரூபாய் மதிப்​பிலான தங்க நகைகள் ஆகியவையும் காணாமற்போனது தெரியவந்ததாகக் கூறப்​படு​கிறது.

ராமர் கோயில் அறக்​கட்​டளை​யின் அலு​வல​கப் பொறுப்​பாளர்​களில் ஒருவருடன் வங்​கி​யால் பணி​யமர்த்​தப்​பட்ட முகமை​யின் ஊழியர்கள் சிலரும் இந்​தத் திருட்​டைச் செய்​த​தாகக்​ குற்​றச்​சாட்​டு​கள்​ எழுந்​துள்​ளன.

முறை​கேடு செய்தவர்கள், ஆதா​ரங்​களை அழித்​தவர்​கள் பற்​றிய விவரங்களை விசாரணைக் குழு​வினர் சேகரித்து வரு​கின்​றனர்.

‘ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்​கட்​டளை அதிகாரிகளுக்கு நெருக்​க​மானவர்​கள், அயோத்​தி​யில் திடீரெனச் சொத்து சேர்த்தவர்கள் கண்​காணிப்பு வளை​யத்​துக்​குள் வந்துள்ளனர்.

அவர்களில் முக்​கிய​மாக அறக்​கட்​டளைப் பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராயின் முன்​னாள் ஓட்​டுநர் ராம் சங்கர் யாதவ்மீது சந்​தேகம் எழுந்​துள்​ளது.

குறிப்புச் சொற்கள்