தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசுப் பேருந்தும் லாரியும் மோதியதில் பலர் படுகாயம்

1 mins read
7db54d27-d2a0-4f63-8b17-bb27d12005af
அரசுப் பேருந்தும் லாரியும் மோதியதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. - படம்: ஊடகம்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்து ஒன்று பேர்ணாம்பட்டிற்கு திங்கள்கிழமை (மே 26) காலை 5.45 மணியளவில் புறப்பட்டது.

அந்தப் பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் அருகில் உள்ள தோல் தொழிற்சாலை, காலணித் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்காகச் சென்றுகொண்டிருந்தனர்.

இந்நிலையில் தனியார் நிறுவனம் அருகே சென்றபோது எதிர்த்திசையில் ஆம்பூர் நோக்கி வந்த லாரி அதிவேகமாக பேருந்தின் மீது மோதியது.

இதில் பேருந்தின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் ஆம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முதல் நிறுத்தத்தில் இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்