தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருமணத்தின்போது ஒலிக்கப்பட்ட பாடலால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

1 mins read
3a54aae3-f104-4e66-b9b5-7973e3c4ebde
‘சன்னா மெரேயா’ என்ற பாடல் காட்சி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: திருமணத்தில் ஒலிக்கப்பட்ட பாடலால், முன்னாள் காதலியின் நினைவு வந்து மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

டெல்லியில் நடந்த ஒரு திருமணத்தின்போது ‘சன்னா மெரேயா’ என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.

அந்தப் பாடலைக் கேட்டதும், மணமகன் உணர்ச்சிவசப்பட்டு, தனது முன்னாள் காதலை நினைத்து மனம் வருந்தத் தொடங்கினார்.

அதனால் அவர் திருமணத்தை நிறுத்திவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார். அது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூக வலைத்தளங்களில் அந்தக் காணொளி வெளியானதால் வலைத்தளவாசிகள் பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

‘சன்னா மெரேயா’ என்பது ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தில் வரும் காதல் முறிவு பாடலாகும்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திஇந்தியாதிருமணம்