கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த மதிமுக எம்எல்ஏக்கள்

கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த மதிமுக எம்எல்ஏக்கள்

2 mins read
38388058-3740-4d69-87a4-afea6b385159
அண்மையில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. - படம்: தினத்தந்தி

சென்னை: மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை அக்கட்சியின் இரு எம்எல்ஏக்களும் புறக்கணித்ததால் அதன் பொதுச் செயலாளர் வைகோ அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மதிமுகவுக்கு மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, சீர்காழி, கடையநல்லூர் ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்தத் தொகுதிகளில் மதிமுகவினர் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர்.

அவற்றில் சீர்காழி (செந்தில் செல்வன்), கடையநல்லூர் (ராஜேந்திரன்) ஆகிய தொகுதிகளில் மதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.

தற்போது, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகி, தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் என பேசப்பட்டு வருகிறது. அண்மையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசியது அந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

ஆனால், மதிமுகவின் இரு எம்எல்ஏக்களும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளதால், அவர்கள் நேரடியாக தவெகவுக்கு ஆதரவு தரமுடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணாநகரில் மதிமுக பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 27) காலை தொடங்கியது. அந்தக் கூட்டத்தில் மதிமுக எம்எல்ஏக்கள் இருவருமே கலந்துகொள்ளவில்லை.

தவெகவுக்கு அதிகாரபூர்வமாக மதிமுக ஆதரவளித்தால் இரு எம்எல்ஏக்களும் பதவி விலக நேரிடும். இடைத்தேர்தலில் மீண்டும் தங்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்ற சந்தேகம் அவ்விரு எம்எல்ஏக்களுக்கும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது எம்பியாக உள்ள துரை வைகோ இடைத்தேர்தலில் போட்டியிட்டு தவெக அமைச்சரவையில் பங்கேற்கக்கூடும் என்ற ஊகச் செய்தியும் பரவிவரும் நிலையில், பொதுக்குழுக் கூட்டத்தில் அவரும் பங்கேற்கவில்லை.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இந்தச் சூழலில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 27) மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தவெகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்