புதுடெல்லி: இவ்வாண்டு அமைதிக்கான நோபெல் பரிசு பெறுவதற்கான பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலுவான போட்டியாளராக இருப்பார் என்று அப்பரிசுக் குழுவின் துணைத் தலைவர் ஆஷ்லெ டோயெ கூறியதாகச் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், அது பொய்ச் செய்தி என்று மறுத்துள்ளார் திரு டோயெ.
"ஒரு பொய்ச் செய்தி பரவி வருகிறது. அதற்கு உயிரூட்ட வேண்டாம். நான் 'டுவீட்' செய்ததாக வெளியான அச்செய்தியை நான் முற்றிலும் மறுக்கிறேன்," என்று 'ஏஎன்ஐ' நிறுவனத்திற்கு அளித்த காணொளி நேர்காணலின்போது திரு டோயெ கூறியதாகச் சொல்லப்படுகிறது.
முன்னதாக, இந்தியா பணக்கார, ஆற்றல்மிக்க நாடாக எழுச்சி பெற்றுள்ளது என்றும் அதற்கு மோடி அரசின் கொள்கைகளே முக்கியக் காரணம் என்றும் திரு டோயெ புகழ்ந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


