லடாக்கில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்ட ராணுவப் போர் வான்குடை

லடாக்கில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்ட ராணுவப் போர் வான்குடை

1 mins read
dc493cf2-32d4-4680-bf2c-e159f2838dfe
கடல் மட்​டத்​திலிருந்து 22,000 அடி உயரத்​தில், உறைநிலைக்குக்கீழ் 15 டிகிரி செல்​சி​யஸ் (-15°C) கடுங்குளிரில் டிஆர்​டிஓ தயாரித்த அந்த வான்குடையின் செயல்பாடு சோதிக்கப்பட்டது. - படங்கள்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

லே (லடாக்): ல​டாக் யூனியன் பிரதேசத்​தில் உள்ள லே மாவட்டத்தில், உலகின் மிக உயர​மான பகுதி ஒன்​றிலிருந்து இந்தியத் தற்காப்பு ஆய்வு, மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உரு​வாக்​கிய ராணுவப் போர் வான்குடை புதன்கிழமை (ஆகஸ்ட் 26) வெற்றிகரமாகச் சோ​திக்​கப்​பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் மட்​டத்​திலிருந்து 22,000 அடி உயரத்​தில், உறைநிலைக்குக்கீழ் 15 டிகிரி செல்​சி​யஸ் (-15°C) கடுங்குளிரில் அந்தச் சோதனை நடத்​தப்​பட்​டது.

தற்காப்பு ஆய்வு, மேம்பாட்டு அமைப்பின் ஏடிஆர்​டிஇ ஆய்வுக்கூடத் தலை​மைச் சோதனை​யாளர் விங் கமாண்​டர் ராகுல்ஜா, முதன்மை வாரண்ட் அதி​காரி​கள் ஆர்​.ஜே.சிங், விவேக் திவாரி மூவரும் அந்த வான்குடை மூலம் குதிக்கும் சாகசச் செயலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து டிஆர்​டிஓ அமைப்பு எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், லடாக்​கில் உள்ள நியோ​மா, மூத் பகு​தி​யில் இச்​சோதனை நடை​பெற்​றதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், “சோதனைக் குழு​வினர், இந்த ராணுவப் போர் வான்குடை அமைப்புடன், உள்​நாட்​டிலேயே தயாரிக்​கப்​பட்ட பாரா கம்ப்யூட்டர், உயிர்வாயுக் கருவிகள், சிறப்பு உடைகள் உள்ளிட்ட அனைத்​துத் துணை அமைப்​பு​களை​யும் வெற்றிகரமாகப் பயன்​படுத்​தினர்.

“20,000 அடி உயரத்​தில் வான்குடை திறக்​கப்​பட்​டு, கடல் மட்டத்திலிருந்து 13,700 அடி உயரத்​தில் குழு​வினர் பாது​காப்​பாகத் தரை​யிறங்​கினர்,” என்று அது தெரிவித்துள்ளது.

கடுங்குளிர் நில​வும் உயர​மான மலைப் பகு​தி​களில், இந்த வான்குடை அமைப்பின் செயல்​திறன், நம்​பகத்​தன்மை, ராணுவப் பயன்​பாட்​டுத்தகுதி ஆகியவை இச்​சோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டதாகக் கூறி​யுள்ள டிஆர்​டிஓ, இது பாதுகாப்​புத் தொழில்நுட்​பத்​தில் இந்தியாவின் தற்​சார்பு இலக்கை மேலும் வலுப்​படுத்​தியிருப்பதாகக் குறிப்​பிட்​டுள்​ளது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாராணுவம்வான்குடைபோர்பரிசோதனைலடாக்