புதுடெல்லி: மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் பயன்பெறும் நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை இந்தியாவிலேயே வடிவமைக்காவிட்டால் மத்திய அரசின் மானியங்கள் கிடைக்காது என்று மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
“மானியங்களைப் பெறும் நிறுவனங்கள், வெறும் உதிரிபாகங்களை இணைக்கும் பணியோடு நின்றுவிடாமல், உள்நாட்டிலேயே தயாரிப்புகளை வடிவமைக்கும் திறனை மேம்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
உள்நாட்டுத் தொழில் சூழலை வலுப்படுத்துவதில் அக்கறை காட்டாத நிறுவனங்களுக்கு மானியங்களை நிறுத்த மத்திய அரசு தயங்காது என்றும் அமைச்சர் அஸ்வினி எச்சரித்தார்.
“அரசாங்கம் எதிர்பார்த்த அளவில் நிறுவனங்களிடமிருந்து ஒத்துழைப்பும் முன்னேற்றமும் இல்லை. அவற்றின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிக்கின்றன,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
நிறுவனங்கள் தங்களைச் சீர்படுத்திக் கொள்ளாவிட்டால் மத்திய அரசு கடுமையான முடிவுகளை எடுக்கும் என்றும் அமைச்சர் அஸ்வினி தெரிவித்தார்.

