200 வகை துப்பாக்கிகளுக்கு ஆயுத பூசை செய்த உ.பி. சட்டமன்ற உறுப்பினர்

1 mins read
16053b4d-5d7d-4347-95d6-e108f68b8517
உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ராஜா பைய்யா என்கிற ரகுராஜ் பிரதாப் சிங். - படம்: இணையம்

புதுடெல்லி: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அரசி​யல்​வா​தி​களில் ஒரு​வர் ராஜா பய்யா என்​கிற ரகு​ராஜ் பிர​தாப் சிங்.

பிர​தாப்​கரைச் சேர்ந்த இவர் 1993ஆம் ஆண்டு முதல் 2018 வரை தொடர்ந்து சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்​தார். உ.பி.​யில் ஆட்​சிக்கு வரும் கட்சி எதி​லும் சேராமலேயே அதன் அமைச்​சர​வை​யில் இடம்​பெறும் அளவுக்கு அரசி​யல் செல்​வாக்கு கொண்​ட​வர்.

இவ்​வாறு, பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்​வாடி ஆகிய கட்​சிகளின் அரசில் அமைச்​ச​ராக இருந்​தார். 2018ஆம் ஆண்டில் ஜன்​சத்தா தளம் என்ற தனிக் கட்சி தொடங்கி அதன் சார்​பில் பிர​தாப்​கர் மாவட்​டம் குண்டா தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்​கிறார்.

ராஜா பய்யா அண்மையில் தனது மாளி​கை​யில் ஆயுத பூசை கொண்​டாடி​னார். அதில் ஏறத்தாழ 200 வகை உள்​நாட்டு மற்​றும் வெளி​நாட்டு துப்​பாக்​கி​கள் இடம்பெற்​றிருந்​தன. அவற்றைக் காண ஏராள​மானோர் கூடினர். அவர்​கள் தங்கள் கைப்பேசிகள் மூலம் காணொளி எடுத்த காட்​சிகள் இணையத்தில் காட்டுத்தீயைப் போல பரவி பார்ப்​பவரைத் திகைக்க வைத்​துள்​ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்