தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லியில் பிரெஞ்சுத் தூதரிடம் கைப்பேசித் திருட்டு; நால்வர் கைது

1 mins read
2e8e6c9f-616d-49ba-97c9-7650093dc159
மாதிரிப்படம்: - ஊடகம்

புதுடெல்லி: தீபாவளிக்காக மனைவியுடன் பொருள் வாங்குவதற்காக டெல்லி சாந்தினி சௌக் சந்தைப் பகுதிக்குச் சென்ற இந்தியாவிற்கான பிரெஞ்சுத் தூதர் தியரி மத்தோ தமது கைப்பேசியைப் பறிகொடுத்தார்.

இம்மாதம் 20ஆம் தேதி அந்தத் திருட்டு அரங்கேறியது. அதன் தொடர்பில் டெல்லி காவல்துறை நால்வரைக் கைதுசெய்துள்ளது.

உடனடியாக திரு மத்தோ அதுகுறித்து இணையம் வழியாக புகார் அளித்தார். பிரெஞ்சுத் தூதரகமும் அதுபற்றி மறுநாள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகளைத் தீவிரமாக ஆராய்ந்த காவல்துறை, 20 முதல் 25 வயதிற்குட்பட்ட நால்வரைக் கைதுசெய்தது. அவர்களிடமிருந்து திரு மத்தோவின் கைப்பேசியும் மீட்கப்பட்டதாக ஓர் அறிக்கை மூலம் காவல்துறை தெரிவித்தது.

கைதான நால்வரும் டிரான்ஸ் யமுனா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் காவல்துறை கூறியது.

விரைந்து செயல்பட்டு, கைப்பேசியை மீட்ட காவல்துறையினருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்