பிஷ்ணுபூர்: மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அம்மையம் வெளியிட்ட தகவலில், பிஷ்ணுபூரின் இம்பாலில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என அங்குள்ள காவலர்கள் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) அதிகாலை 4.42 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.64 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 93.83 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையுடன் 10 கி.மீ. ஆழத்தில் பிஷ்ணுபூர் பகுதியில் மையம் கொண்டிருந்தது. இதன் நீளம் 93.83 ஆகவும், ஆழம் 10 கி.மீட்டராகவும் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.