பிறந்தநாள், நினைவுநாளில் பேசிக்கொண்ட மோடி, ராகுல்

பிறந்தநாள், நினைவுநாளில் பேசிக்கொண்ட மோடி, ராகுல்

1 mins read
5a0b245f-d494-46c2-9162-27ef81f3b7fe
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்க்கட்சித் தலைவரும் ராகுல் காந்தியும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் சந்தித்தனர்.  - படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: ஜோதி ராவ் புலேயின் 200வது பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப்ரல் 11) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் சந்தித்தனர்.

திரு மோடி, வாகனத்திலிருந்து இறங்கி ராகுலுக்கு அருகே நின்று அமைதியான சூழலில் சில வார்த்தைகள் பகிர்ந்துகொண்டார். அது தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே அடிக்கடி நிகழும் கடுமையான அரசியல் கருத்துப் பரிமாற்றங்களுக்கு மத்தியில், இந்த நேருக்கு நேர் உரையாடல் இடம்பெற்றது.

இரு தலைவர்களும் பேசியபோது, ​​அருகிலிருந்தவர்கள் மௌனம் காத்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜோதி ராவ் புலேயின் உருவச்சிலைக்கு அரசியல் தலைவர்கள் பலர் மலரஞ்சலி செலுத்தினர்.

சமூக சீர்திருத்தவாதியான மகாத்மா ஜோதி ராவ் புலேயின் 200வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்