புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளிக்கிழமையையும் (ஜூலை 25) சேர்த்து 4,078 நாள்கள் அப்பதவியை வகித்துள்ளார்.
முன்னதாக இந்திரா காந்தி 4,077 நாள்கள் பிரதமராக இருந்தார். அவரை இப்போது திரு மோடி பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது ஆக அதிக காலம் இந்தியப் பிரதமர் பதவியை வகித்துள்ளார்.
திருவாட்டி காந்தி, 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் தேதியிலிருந்து 1977 மார்ச் 24 வரை பிரதமராக இருந்தார்.
தற்போது திரு மோடியைவிட கூடுதல் காலம் இந்தியப் பிரதமராக இருந்த ஒரே தலைவர் இந்தியாவின் முதல் பிரதமரான திரு ஜவஹர்லால் நேரு.
அதேவேளை திரு மோடி, இந்தியா சுதந்திரமடைந்தபின் பிறந்து பிரதமர் பதவி வகித்த முதல் தலைவராவார்.