விரைவில் திறக்கப்படும் அயோத்தி ராமர் கோயில்

விரைவில் திறக்கப்படும் அயோத்தி ராமர் கோயில்

1 mins read
9af50412-28ea-4259-a6d1-083dffa3f945
அயோத்தி ராமர் கோவிலின் முதல் கட்டப் பணிகள் டிசம்பர் மாதம் நிறைவடையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். - படம் : ராய்ட்டர்ஸ்

ஹரித்துவார்: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுவரும் ராமர் கோயில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறக்க தயாரான நிலையில் உள்ளது.

அந்தக் கோயிலைக் கட்டும் பணியில் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.

அக்கோயிலை பிரதமர் மோடி திறந்து வைப்பதன் மூலம் 1990ஆம் ஆண்டு அவருடைய பாஜக கட்சி அப்பகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் எனக் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டுத் தேர்தலுக்கு முன்னதாக இக்கோயிலைத் திறக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ராமர் கோவிலின் முதல் கட்டப் பணிகள் டிசம்பர் மாதம் நிறைவடையும் எனவும் பக்தர்கள் வழிபாட்டுக்காக அது ஜனவரி மாதம் திறக்கப்படும் எனவும் அதிகாரிகளில் ஒருவர் வியாழக்கிழமை கூறினார்.

வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரியில் மகரச் சங்கராந்திக்குப் பிறகு, 16 முதல் 24ஆம் தேதிக்குள் ராம் லல்லா சிலை நிறுவச் செய்யப்படும் எனச் சொல்லப்படுகிறது.

ராம் லல்லா சிலை நிறுவும் பணிக்குத் திரு மோடி தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
கோயில்